ஆத்தூர் தனி சட்டமன்ற தொகுதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது 25087 பேர் நீக்கம்.
சேலம்,டிச.19-
சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தமிழ்மணி தலைமையில் இன்று மதியம் 3மணி அளவில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது .இந்த வாக்காளர் பட்டியலில் எஸ்ஐஆர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பு ஆண் வாக்காளர்கள்
118749 ,பெண் வாக்காளர்கள் 126882 இதர வாக்காளர்கள் 24 பேர் மொத்தம் 245655, எஸ்ஐ ஆர் திருத்தத்திற்கு பின் நீக்கம் செய்த வாக்காளர்கள் ஆண் வாக்காளர்கள் 11476 பெண் வாக்காளர்கள் 13609 இதார் வாக்காளர்கள் 2 பேர் மொத்தம் 25087 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி ஆண் வாக்காளர்கள் 107273 பென் வாக்காளர்கள்
113273 இதார் வாக்காளர்கள் 22 பேர் மொத்தம் 220568 வாக்காளர்கள் இன்று வரைவு செய்யப்பட்ட வாக்காளர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் நீக்கல் இடம் மாறுதல் செய்தவர்கள் இன்று முதல் படிவம் ஆறு ஏழு எட்டு பயன்படுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என கோட்டாட்சியர் தெரிவித்தார். மேலும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி சீரமைப்பிற்கு முன் 284 யாக இருந்து வந்த நிலையில் தற்போது வாக்குச்சாவடி சீரமைப்பிற்கு பின் 306 வாக்குச்சாவடி ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது என்று கோட்டாட்சியர் தெரிவித்தனர். இந்த வாக்காளர் வரைவு பட்டியலில் ஆத்தூர் தாசில்தார் பாலாஜி, பெத்த நாயக்கன் பாளையம் தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் திமுக நகர செயலாளர் ராமச்சந்திரன் , நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர், சேலம் கிழக்கு மாவட்ட சிறுபான்மை அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் பர்கத் அலி , சேலம் கிழக்கு மாவட்ட விவசாய அணியின் அமைப்பாளர் சேகர், ஒன்றிய செயலாளர் அன்பு, பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயலாளர் வெங்கடேஷ், அதிமுக நகர செயலாளர் மோகன், காங்கிரஸ் கட்சி நகர மன்ற உறுப்பினர் தேவேந்திரன், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிஜேபி கட்சியினர் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.







