ஆத்தூர் ஆதிராவிட நலத்துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பெரியசாமி 59. இந்த நிலையில் ஆத்தூர் அம்பேத்கர் நகர் சுந்தர்ராஜன் மகன் ஈஸ்வரன் தனது தாய் பச்சையம்மாள் என்பவர் பெயரில் அரசால் கொடுக்கப்பட்ட மூன்று சென்ட் நிலத்தை தனது பெயருக்கு மாற்றுவதற்காக என்ஓசி தடையில்லா சான்று வாங்குவதற்காக பெரிய சாமியிடம் மனு அளித்துள்ளார் பெரியசாமி 15,000 லஞ்சம் கேட்டதாக கூறியது அடுத்து சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் புகார் அளித்ததின் பெயரில் இன்று மதியம் 3 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.






