சேலம் கலைஞர் அரங்கத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியாக திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் நேற்று கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் உள்ள நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது அப்பொழுது கெங்கவல்லி பகுதியில் நிர்வாகிகள் ஒற்றுமை இல்லாமல் செயல்படுகிறார்கள் என்றும் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும் ஒன்றிய செயலாளருடன் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் பெயர்கள் மற்றும் பேனரில் போட்டோ போட வேண்டும் என்றும் கூறினார் அப்படி இல்லை என்றால் பதவி விட்டு நீங்கள் எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மட்டும் தான் நமக்கு ஒரே தலைவர் என்றும் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் மட்டும் தான் வெற்றி பெற முடியும் என்றும் கூறினார் மேலும் ஒவ்வொரு பேரூர் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் இனக்கத்துடன் செயல்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் பதவியில் இருந்து எடுத்து விடுவோம் என்றும் அமைச்சர் கூறியதாக தகவல்.






