சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட அக்கரை மாரியம்மன் கோவில் செல்லும் சுவேதா நதிக்கரையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் கெங்கவல்லி திமுக பேரூர் செயலாளர் பாலமுருகன் ஏற்பாட்டில்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அடிப்படை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் நான்கு கோடி நிதி ஒதுக்கப்பட்டு இன்று சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் எஸ் ஆர் சிவலிங்கம் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. இந்த விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சின்னதுரை ,சுரேஷ் குமார், நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம் , கெங்கவல்லி பேரூராட்சி மன்ற தலைவர் லோகாம்பாள் ,துணைத்தலைவர் மருதம்மாள் ,மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜனார்த்தன் ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், இளைஞர் அணி நிர்வாகிகள் பிரகாஷ், வினோத், மனோஜ், மற்றும் கெங்கவல்லி காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் சிவாஜி, புஷ்பநாதன், முன்னாள் ஒன்றிய செயலாளர் காமராஜ், அண்ணாதுரை மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.






