நியாய விலக்கடை ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்பட்டது.
சேலம்,நவ.18-
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சியில் புதியதாக நியாய விலை கடை, ஊராட்சி மன்ற அலுவலகத்தை இன்று காலை 11 மணியளவில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் தலைமையில் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு அரிசி பருப்புகள் வழங்கப்பட்டது. மேலும் ஒன்றிய செயலாளர் செழியன், சேலம் கிழக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், சேலம் கிழக்கு மாவட்ட விவசாய அணியின் தலைவர் ராஜேந்திரன் ,முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சேகர் , தலைமைக் கழக பேச்சாளர் வெங்கடேஷ்,மற்றும் ராமநாயக்கன் பாளையம் கருணாநிதி ,கல்லாநத்தம் தேர்தல் பணிக்குழு உறுப்பினர் ரஞ்சித் குமார் ,முத்துசாமி, முட்டல் ராஜேந்திரன்,மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






