ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் தனியார் கல்லூரியில் நேற்று இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பாரதி மகாத்மா பண்பாட்டு பேரவை இந்திய மருத்துவ சங்கம் தலைவாசல் லயன்ஸ் கிளப் தனியார் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் 98 யூனிட்டுகள் ரத்த தானங்களாக பெறப்பட்டு ஆத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது .இந்த விழாவில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஜோசப் தளியத் 75 வது முறையாக ரத்த தானம் செய்தார் விழாவிற்கு சேர்மன் ஜோசப் தளியத் தலைமை வகித்தார் இவ்விழாவில் அபிப் உசேன் , நிலா ராஜா, பரமசிவம் சுப்பிரமணி இந்திய மருத்துவ சங்கம் இரத்தினகுமார் ஹரி விஷ்ணு கல்லூரியின் சார்பில் சக்திவேல் கூட்ரோடு பழனிவேல் தலைவாசல் லயன்ஸ் கிளப் லேடிஸ் கிளப் கல்லூரி மாணவி மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






