சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை கலைஞர் திடலில் நேற்று மாலை ஓர் அணியில் தமிழ்நாடு, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்கிற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தலைமை சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் தலைமை வகித்தார் .ஆத்தூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ராமச்சந்திரன், வரவேற்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி கலந்துகொண்டு பேசிய போது தமிழக முதல்வர் தமிழ்நாட்டுக்காக எடுத்த வரும் முயற்சிகள் எண்ணற்ற முயற்சிகள் என்றும் இதுவரை மகளிர் உரிமைத்தொகை 90% கொடுத்துள்ளனர் என்றும் உடனடியாக தகுதி பெரும் அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் மகளிர் பேருந்து இதுவரை 730 கோடி முறை மகளிர்கள் பயணம் செய்துள்ளனர் என்றும் கூறினார் .கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை கொடுத்து கொண்டிருக்கும் ஒரு கட்சி என்றால் திமுக என்றும் மேலும் சேலம் மாவட்டம் என்றால் வீரபாண்டியார் கோட்டையாக இருந்தது இதை மீண்டும் நீங்கள் செயல்படுத்தி வருகிற சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்றும் திமுக நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் தமிழ்நாட்டை தலை துணிய விடமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.விழாவில் நரசிங்கபுரம் நகர செயலாளர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர்கள் செழியன் வரதராஜன், சித்தார்த்தன், கெங்கவல்லி பேரூர்செயலாளர் பாலமுருகன், தலைவாசல் மத்திய தொகுதி ஒன்றிய செயலாளர் மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துலிங்கம், ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் ,நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர், அழகரசன், சோமு, , ஆவின் செல்வமணி, அருண், பர்கத் அலி,அசோகன், பைத்தூர் ரவி,மல்லியகரை ராஜா, மஞ்சினி செல்வம் ,அரசு, செந்தில், நகர மன்ற உறுப்பினர்கள் சம்பத், சசிகுமார் , சிவாஜி, வினோத்,சையது, மனோஜ் குமார், மற்றும் 5000க்கு மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






