சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது இந்த 33 வார்டுகளிலும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குடிநீர் என்பது மிகவும் முக்கியமானது ஒன்றாகும் இவர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடிநீர் கட்டணம் செலுத்தி வருகின்றனர். ஆனால் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கொடுத்து வந்தனர் அதன்பிறகு ஏழு நாட்கள் ஆனது தற்பொழுது 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மேட்டூர் குடிநீர் தரப்படுகிறது ஆனால் நகராட்சி நிர்வாகத்தில் உள்ள குளறுபடியால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் தர முடியவில்லை. நகராட்சி ஏன் பொதுமக்களை வஞ்சிக்கிறது என்றும் தெரியவில்லை உடனடியாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் தர முடியவில்லை என்றாலும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை 33 வார்டுகளுக்கும் குடிநீர் தர வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டனர் இதனை அடுத்து கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் விநியோகம் காலம் தாமதமாக வருகிறது இதனை கண்டித்து அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.






