சேலம் மாவட்டம் ஆத்தூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, பாரதியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆத்தூர் அரசு மருத்துவமனை இணைந்து நேற்று எச்ஐவி விழிப்புணர்வு பேரணி ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேரணியை ஆத்தூர் கோட்டாட்சியர் தமிழ்மணி கொடி அசைத்து தொடங்கி வைத்தார் இந்த விழாவில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சேர்மன் ஜோசப் தளியத், துணை சேர்மன் ஹபிப் உசேன், செயலாளர் ஜான் சுந்தர்ராஜ், மற்றும் பாரதியார் கல்வி நிறுவனத்தின் செயலாளர் ஏ கே ராமசாமி, மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள் பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் ஆசிரியர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெயலட்சுமி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு முக்கிய பகுதிகளில் பேரணியாக வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.






