கெங்கவல்லி
சேலம் மாவட்டம் கெங்கவல்லி தனியார் திருமண மண்டபத்தில் இன்று திமுக சார்பில் பாக முகவர்கள் பி எல் ஏ 2 மற்றும் நிர்வாகிகள் கூட்டம் ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினர் எஸ் ஆர் சிவலிங்கம் கலந்து கொண்டு பிஎல்ஏ 2 நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று விளக்கி கூறினார் மேலும் அதிகமாக உள்ள உறுப்பினர்களை இரண்டாக பிரித்து அதற்கு தனியாக ஒரு ஆள் போடவேண்டும் என்று கூறினார் .இந்த கூட்டத்தில் பேரூர் செயலாளர் பாலமுருகன் ஒன்றிய செயலாளர்கள் மணி, பாலமுருகன், மற்றும் வினோத்குமார், மனோஜ் குமார், தங்கப்பாண்டியன் ,சையது ,பெத்தநாயக்கன்பாளையம் அழகரசன் ,மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






