சேலம் மாவட்டம் ஆத்தூர் துலுக்கனூர் ஊராட்சியில் இன்று ஆத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேல் நீர் தேக்க தொட்டியை கட்டப்பட்டு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்த விழாவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் விபி சேகர், ஒன்றிய துணை செயலாளர் கல்லாநத்தம் பெரியசாமி,
இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் ரமேஷ்,அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சதாசிவம், தகவல் தொழில்நுட்ப அணியின் ஒன்றிய செயலாளர் செல்வமணி, இன்ஜினியர் முரளி,மகளிரணி ஒன்றிய செயலாளர் அஞ்சலை , எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் மருதமுத்து , துலுக்கனூர் குட்லக் என்கிற
இளங்கோவன் உமாமகேஸ்வரி , கல்லாநத்தம் மணிமாறன் மற்றும் கிளை செயலாளர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






