அரசு மதுபான கடை வந்தால் தேர்தல் புறக்கணிப்போம் பொது மக்கள் புகார்.
ஆத்தூர்,ஜுலை.9-
சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட சார்வாய் புதூர் ஏழாவது வார்டு பகுதியில் அரசு மதுபான கடை வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்களுக்கு தெரிய வந்ததை அடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் டாஸ்மார்க் மண்டல மேலாளிடம் புகார் அளித்தனர் மேலும் டாஸ்மாக் வருவதற்கு கட்டிடங்கள் வேலை நடைபெற்று வருகிறது என்றும் அதை உடனே தடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் இந்த பகுதியில் டாஸ்மார்க் கடை வந்தால் சுற்றியயும் 50 குடும்பங்கள் விவசாயம் செய்து வருகிறோம் அப்பொழுது குடிமகன்கள் செல்லும்பொழுது கீழே பாட்டிலை போட்டு உடைப்பார்கள் என்றும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு சிரமம் ஏற்படும் என்றும் தெரிவித்தனர் ஏரிக்கரை அருகே உள்ளதனால் பாட்டிலை உடைத்து அங்கே போட்டு விடுவார்கள் தண்ணீர்
ஏரி நிற்கும் பொழுது இந்த பாட்டில் மூலமாக பொதுமக்கள் விபத்து நடக்க ஏற்படும் உடனடியாக இந்த பகுதியில் அரசு மதுபான கடை அனுமதிக்க கூடாது என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர் மீறி இந்த பகுதியில் மதுபான கடை வந்தால் 2026 ஆம் ஆண்டு தேர்தலை புறக்கணிப்போம் என்றும் எங்களுடைய ரேஷன் கடையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்போம் என்றும் தெரிவித்தனர்.






