சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் பேரூர் செயலாளர்களை நேற்று ஆத்தூரில் அழைத்து சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் கண்டித்தது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது . திமுகவின் தலைவர் ஸ்டாலின் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதி வெற்றி பெறுவோம் என்று இரவு பகல் பாராமல் பாடுபட்டு வரும் நிலையில் ஆத்தூர் கெங்கவல்லி திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பார்வையாளர்கள் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர் சேர்க்கையில் தொய்வு காணப்பட்டதால் மாவட்ட செயலாளர் கண்டித்தும் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது ஒவ்வொரு நகர செயலாளரும் ஒன்றிய செயலாளரும் மிக விரைவில் உறுப்பினர் சேர்க்கை செய்யவில்லை என்றால் நீங்கள் கட்சிக்கு தேவை இல்லை என்றும் எச்சரிக்கை செய்தார் இதனை அடுத்து இன்று அனைத்து ஒன்றிய செயலாளர்கள் காலை முதலே உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்ததினர் இதனால் திமுக கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..






