சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இன்று தொடங்கப்பட்டது. கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன் தலைமையில் BLA2, BDA, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் தங்கபாண்டியன், பேரூர் பொருளாளர் மூர்த்தி, மகளிர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெகதீஷ் பாபு, துணை அமைப்பாளர் சூர்யா, பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.






