சேலம் மாவட்டம் ஆத்தூர் 13 வது வார்டில் இன்று சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர் வி ஸ்ரீராம் ஏற்பாட்டில் 13 வது வார்டில் உள்ள பொதுமக்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று வாக்குகளை சேகரித்தார் மேலும் ஏன் ஓரணியில் தமிழ்நாடு வேண்டுமென்றும் விளக்கம் அளித்தார் நாம் இப்பொழுது திமுகவில் சேரவில்லை என்றால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் பிஜேபி கூட்டணி வெற்றி பெற்றால் பெறாது என்றாலும் வெற்றி பெற்றால் தமிழகத்தில் உள்ள பொதுமக்களுக்கு இன்னல்கள் செய்வார்கள் அதனால் தான் திமுக உறுப்பினராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் மேலும் உங்களுக்கு தேவையான திட்டங்களை நாங்கள் வழங்குவோம் என்றும் கூறினார் தமிழக அரசு சார்பில் நீங்கள் பெறப்படும் திட்டங்கள் என்ன என்று ஒவ்வொரு வீட்டிலும் கேட்டறிந்தார் மேலும் உங்களுக்கு என்ன வேண்டும் தெருவிளக்கு குடிநீர் பிரச்சனை சாலை வசதி பிரச்சனை எதுவாக இருந்தாலும் நீங்கள் கூறலாம் என்றும் அதை ஒரு பதிவேட்டில் எழுதிக் கொண்டார் இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஆத்தூர்
தெற்கு நகர செயலாளர் ராமச்சந்திரன் ,நகர மன்ற உறுப்பினர் சம்பத்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் அருண், 13 வது வார்டு செயலாளர் ஜி.ராஜேந்திரன் வார்டு பிரதிநிதி ஆவின் செல்வமணி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






