கெங்கவல்லியில் இருந்து ஓடை வழியாக நடுவலூர் பகுதியில் உள்ள ஏரிக்கு தண்ணீர் செல்கிறது இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு நடுவலூர் பொதுமக்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து ஓடை ஆலம்படுத்தி தூர்வாரப்பட்டு ஏரிக்கு கொண்டு செல்ல வழிவகை செய்து வந்தனர் இந்த நிலையில் ஓடை பகுதியை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு ஓடையை அகற்ற விடாமல் தடுத்தனர் இதனை கண்டித்து இன்று காலை நடுலூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் அனைவரையும் சமாதானம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.






